தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி)

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது.

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது. அரைப்பாவாடை கட்டிய 5 வயது சிறுமி கடைக்குப் போய் வந்த போது அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது பெப்ஸி பாட்டில்.

மகஇகவினரின் பாடல் ஒன்றில் சொல்வது போல நாடு முன்னேறுதுங்குறவனை செருப்பால் அடிக்கும் சிறுகதை.

நாடு முன்னேறுதுங்குறான் அட மினுமினு மினுக்கா ஜிலுஜிலு ஜிலுக்கா
ஜெர்மன் அமெரிக்கா ஜப்பானு கணக்கா நம்ம நாடு முன்னேறுதுங்குறான்
தாகம் தீர கோக்க கோலா, போதை ஏற பாரின் சீசா,
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெஹரு
மிச்ச வேலைக்கெல்லாம் மினரலு வாட்டரு
குடிக்கத் தண்ணி இல்ல கொப்புளிக்க பன்னீரு
அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு
பொம்மை
கடந்து போதல்

நன்றி- http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_7634.html