Tag: குழந்தை

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

    இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான் ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.…

  • சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

    பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் நேரடியான பிரச்சாரக் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு சற்று அலுப்பூட்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். கதையின் முடிவில் இக்கதையினால் அறியப்படும் நீதி…

  • சின்னச்சின்ன ஆசை

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன உணர்வுகளை இன்னமும் நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லைதான். அனுபவத்தினால் ஓரளவுக்கு பெற்றோர்/காப்பாளர்கள் சில அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட…

  • குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

    மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/. 8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!   சின்னச்சின்னக் கதைகள் 1,2 அன்புள்ள குழந்தைகளுக்கு..…