Tag: சிறுவர் கதை

  • மந்திரச் சந்திப்பு -19

    “வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா?” என்றனர். குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் வளன். “நெடு நேரமாக ஓடிய மழை நீரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமா.. அப்படியே நீ முதலில்…

  • மந்திரச் சந்திப்பு -18

    பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.…

  • மந்திரச் சந்திப்பு – 17

    மண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான். “சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு. “சின்ன மாத்தனா?” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்!” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..?” “ஆமா, ’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்னும் பெயரில் தனிக்கதையாகவே வந்திருக்கு. வாங்கிப் படித்து அறிந்துகொள்” என்றது சின்ன மாத்தன். “ஓ.. கண்டிப்பாகப் படிக்கிறேன். சரி!…

  • மந்திரச் சந்திப்பு -16

    அதிர்வு ஏற்பட்டதும் முன்னால் சென்று கொண்டிருந்த டெர்மித்,  பதுங்கிக் கொள்வோம் என்று ஓடத் தொடங்கியதும் பின்னாடியே கானமூர்த்தியும் அருள்வளனும் ஓடத் தொடங்கினர். ஓடும் வழியில் ஏன் மண் துகள்கள் சரிந்து விழுகின்றன என்ற சந்தேகம் எழ, திரும்பிப்பார்த்த வளன் அதிர்ச்சியடைந்தான். அங்கே, ஒரு பெரிய உருண்டை உருண்டு வந்து கொண்டிருந்தது. ஓடிக் கொண்டே, பதுங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தான். கால்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கின. டெர்மித் குறிப்பிட்ட வளைவு திரும்பியதும் அடுத்த அதிர்ச்சி தென்பட்டது. பின்னால்…

  • மந்திரச் சந்திப்பு – 15

    ஒன்றோ இரண்டோ அல்ல நூற்றுக்கணக்கான வேலைக்காரக் கறையான்கள் தலை தெறிக்க ஓடிவந்தன. அவற்றின் வேகத்தைக் கண்டதுமே கானமூர்த்திக்கு விஷயம் புரிந்துவிட்டது. கரையான்களைத் தின்னும் ஏதோ ஒரு விலங்கு வருகிறது. இங்கிருந்து வேகமாகத் தப்ப வேண்டும். வேகமாக வந்த கறையான்கள் உள்ளே அடுக்கி வைக்கப்படிருந்த மரத்துகள்களின் அடியில் சென்று மறையத் தொடங்கின. அதே நேரம் உள்ளிருந்து படைவீரர் கறையான்கள் வாசலை நோக்கி ஓடத் தொடங்கின. “எ.. என்னாச்சு.. ஏன் இப்படி உள்ளேயும் வெளியேயுமாக எல்லோரும் ஓடிட்டு இருக்காங்க!?” என்று…