Tag: குழந்தை

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

    *எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும். *யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?* ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி…

  • கிட்டப்பார்வைக்கு என்ன லென்ஸ்?

    ஞாபக மறதி என்பது, எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அதனால் உங்கள் வீட்டுப்பிள்ளையும் அப்படி இருந்தால், பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. சிறுவயது விஷயங்களைப் படம்பிடித்தாற்போல நினைவுபடுத்திச் சொல்லி அசத்துபவர்களை, தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால் நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, சிலருக்கு நினைவுபடுத்தினாலும்கூட ஞாபகம் வராது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போலவே நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள, அதற்கான பயிற்சிகள் குழந்தைகளுக்குப் பெரிதும் துணை நிற்கும். ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு ஊரில் ஓர் இளைஞன், ‘‘தன்னுடைய பசுமாட்டை…

  • அட்வைஸ் பண்ணி அறுக்காதீங்க..!

    இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள். உலகில் எல்லோரும் அடுத்தவருக்கு இலவசமாக அள்ளித்தருவது அட்வைஸ்தான். ஆனால், நாமும் அந்த அறிவுரைகளின்படியே நடந்திருக்கிறோமா என்பதை எவரும்…

  • நேரம் எங்கே இருக்கு?

      கட்டுரையின் தலைப்பை வார்த்தைகளாக அடிக்கடி (அல்லது எப்போதாவது) உபயோகிப்பவரா நீங்கள்? அல்லது எப்பவுமே சொல்வதில்லை என்பவரா? எந்தப் பிரிவினராக இருந்தாலும் இக்கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவலாம் அல்லது உங்களின் நண்பர்களுக்கு உதவலாம். இன்றைய பொருள் தேடும் அவசர உலகில், நம்மில் பலரும் இல்லத்தில் நேரம் செலவழிப்பதில்லை. அதிலும் இரு பாலருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது நேரத்தை அலுவகத்தில்தான் அதிகமாகச் செலவழிக்கிறோம். இல்லாவிட்டால், வீட்டிலேயே அலுவலக வேலைக்காக அதிக நேரம் செலவழிக்கிறோம். நமது இப்பழக்கம், நமது அடுத்த…

  • படுக்கையை நனைத்தல் குற்றமல்ல!

    இன்று அனேக வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று, படுக்கையில் குழந்தை சிறுநீர் கழித்தல். இதைச் செய்யும் குழந்தையிடம் பல பெற்றோர் நடந்துகொள்ளும் விதம், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது, குழந்தைப் பருவத்தில் பல குழந்தைகள் செய்யும் காரியம்தான். இது இயல்பான ஒன்றுதான்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உறங்கச் செல்லும்போதே, இன்று படுக்கையை நனைத்துவிட்டுத்தான் மறு வேலை என்று எந்தக் குழந்தையும் முடிவு கட்டிக்கொண்டு வருவதில்லை. படுக்கையை ஈரமாக்கும் குழந்தைக்கு, ஒருவித குற்ற…