Tag: குழந்தை வளர்ப்பு

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]

    மரப்பாச்சி சொன்ன அதன் கதையை எல்லாம் கேட்ட பிறகும் பூஜாவால் நம்ப முடியவில்லை. இமைகளை மூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள். “ஏய்… என்னடி… இப்படி உட்கார்ந்திருக்க…?” என்றபடியே பூஜாவின் தோள் தொட்டு உலுக்கினாள் ஷாலு. “என்ன சொல்லுறதுன்னே தெரியலையேடி… இப்படி ஒரு மரப்பாச்சி பேசினால்… ஷாக் ஆகாம இருக்க முடியுமா?” “ஹா…ஹா…” என்று சிரித்த மரப்பாச்சி, “பூஜா நீ இன்னும் ஷாலுவின் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே…? எதுவானாலும் சொல்லு. நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொன்னது.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

    நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது. “ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு. “அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 3]

    கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே மரப்பாச்சி அப்படியே அசைவற்று உரைந்து போனது. “என்னடி.. இன்னுமா எழுது வச்சுகிட்டு இருக்க.. டான்ஸ் கிளாஸ் போகவேண்டாமா?” என்று உள்ளே வந்த அம்மாவின் மரப்பாச்சியைப் பார்த்தார். “எப்பப் பார் இதை வச்சுகிட்டு விளையாடிக்கிட்டு..” என்றபடியே மரப்பாச்சியை எடுக்கப்போனார் அம்மா. அதற்குள் பாய்ந்து அதை எடுத்து, ஓரமாக வைத்தாள் ஷாலு. “ம்மா.. அது பேசுது” என்றான் ஹரி. ““எதுடா..” “அக்கா வச்சிருக்கிற பொம்மை. அது பேசுது..” “இல்லம்மா.. அவன் பொய் சொல்றான்” என்று…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 2]

    ஷாலுவும், ஹரியும் அப்படியே உறைந்துப் போய் இருந்தார்கள். இவர்களின் முன்னால் அந்த மரப்பாச்சி பொம்மை குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தது. இருவரும் பயந்துபோய் இருந்தனர். அது அவர்களின் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. மரப்பாச்சி நடப்பதைப் பார்த்ததுமே, வீறிட்டு கத்த நினைத்தார்கள். ‘ஐயோ.. அம்மா’ என்று அழைக்க நினைத்தனர். ஆனால், “ஐ…” என்று குரல் எழும்பியதும் மரப்பாச்சி அவர்களை நோக்கி, கை ஆட்டியது. அவ்வளவுதான் சத்தமிட முடியாமல் போனது. அறைக்கு வெளியே ஓடிவிடலாம் என்று முயன்றபோதும் முடியவில்லை. அப்படியே இருவரையும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 1]

    முன்னுரை அன்பான தம்பி, தங்கைகளே! இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது. இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு.…