Tag Archives: சிறுவர் கதை

மந்திரச் சந்திப்பு -18

பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , | Leave a comment

மந்திரச் சந்திப்பு – 17

மண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான். “சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு. “சின்ன மாத்தனா?” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்!” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..?” “ஆமா, ’மாத்தன் மண்புழுவின் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , , | Leave a comment

மந்திரச் சந்திப்பு -16

அதிர்வு ஏற்பட்டதும் முன்னால் சென்று கொண்டிருந்த டெர்மித்,  பதுங்கிக் கொள்வோம் என்று ஓடத் தொடங்கியதும் பின்னாடியே கானமூர்த்தியும் அருள்வளனும் ஓடத் தொடங்கினர். ஓடும் வழியில் ஏன் மண் துகள்கள் சரிந்து விழுகின்றன என்ற சந்தேகம் எழ, திரும்பிப்பார்த்த வளன் அதிர்ச்சியடைந்தான். அங்கே, ஒரு பெரிய உருண்டை உருண்டு வந்து கொண்டிருந்தது. ஓடிக் கொண்டே, பதுங்குவதற்கு இடம் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , | Leave a comment

மந்திரச் சந்திப்பு – 15

ஒன்றோ இரண்டோ அல்ல நூற்றுக்கணக்கான வேலைக்காரக் கறையான்கள் தலை தெறிக்க ஓடிவந்தன. அவற்றின் வேகத்தைக் கண்டதுமே கானமூர்த்திக்கு விஷயம் புரிந்துவிட்டது. கரையான்களைத் தின்னும் ஏதோ ஒரு விலங்கு வருகிறது. இங்கிருந்து வேகமாகத் தப்ப வேண்டும். வேகமாக வந்த கறையான்கள் உள்ளே அடுக்கி வைக்கப்படிருந்த மரத்துகள்களின் அடியில் சென்று மறையத் தொடங்கின. அதே நேரம் உள்ளிருந்து படைவீரர் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , | Leave a comment

மந்திரச் சந்திப்பு -14

சில அடிதூரம் நடந்ததுமே வெளியில் இருந்த வெளிச்சம் உள்ளே இல்லை. ஆனாலும் அருள்வளனால் நன்றாகப் பார்க்க முடிந்தது. சாரை சாரையாக கறையான்கள் நடந்துகொண்டிருந்தன. தானும் ஒரு கறையான் அளவுக்கு மாறிப்போய் உள்ளோம் என்பதால் ஏற்பட்ட வியப்பும், கறையான் புற்றின் உள்பக்கம் தான் பார்க்கும் வினோத உலகமும் அவனுக்கு மிகுந்த வியப்பளிப்பதாக இருந்தது. “ஆமா.. இதற்கு உள்ளேயும் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , | Leave a comment