Tag: தமிழக அரசு

  • புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

    நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக…

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும்.…

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…