Tag: தமிழ்

  • எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

    கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, à®…à®´.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும். கம்பனிடம் ஒரு கேள்வி…

  • பெரியாருடன் ஒரு பயணம்

    பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்…

  • இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

    பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும். நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு! தமிழ், இணையம்,…

  • தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?

    தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார். என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்.. என்று ஆங்கிலம் தவிர்த்த ஏனைய எல்லா மொழி எழுதிகளும் keystrokeகளை monitor என்பதை செய்யும். அப்போது தான்…