Tag: திருமா வளவன்

  • ’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

    நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது. ஈழம் பற்றி…

  • சிந்தனைக்கு இரு படங்கள்..

    1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க! — 2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 🙂 அப்ப.. நீங்க..! (அண்ணாச்சி முன்னாள் எழுத்தாளர் தானேன்னு…

  • விடுபட்டவை 13 மார்ச் 2009

    இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி…

  • விடுபட்டவை 19.01.09

    பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..! கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை நூல்களின் விற்பனையும் குறைவு என்று சிலர் சொன்னார்கள். படைப்பிலைக்கிய நூல்களும், கட்டுரை நூல்களும் விற்பனை…