Tag: ராமேஸ்வரம்

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…

  • சாமியாட்டம்- சிறுகதை

    ஆடி மாதம் முழுவதும் சென்னையில் இருக்கும் எல்லா அம்மனுக்கும் பாலாபிஷேகம் நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கூழாபிஷேகம் நடந்துவிடுகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவிலிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மொட்டை போடுவதாக நேர்த்தி செய்வது போல, கூழ் ஊற்றுவதை நேர்த்தி செய்து ஆடிமாதத்தில் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ராமேஸ்வரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடங்கி புரட்டாசி மாத இறுதி வரை பல்வேறு திருவிழாக்களால் களைகட்டும். அதில் மிகவும் விசேஷமானது ராமநாதசாமியின் திருக்கல்யாணமும், தபசுத்திருவிழாவும்.…

  • விடுபட்டவை 15/06/10 (சில புகைப்படங்கள்)

    இங்கே இடம் பெற்றிருக்கும் அனேக படங்களை என் கைபேசி வழியே எடுக்கப்பட்டவை. சில புதியவை, சில பழையது. சும்மா ஒரு பதிவு போடுவோமே என்று தோன்றியதால் பதிவு செய்து வைக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் போய் இருந்த போது கண்டகாட்சியினை தான் மேலே பார்க்கிறீர்கள். இது பற்றி அப்போதே தேவஸ்தானத்திலும்.. சமூக விஞ்ஞானத்தை போதிப்பதாக சொல்லும் மார்சிஸ்ட்கட்சி நண்பர்களிடமும் பேசி விட்டு வந்திருந்தேன். கடந்த வாரம் ஒரு நாள் பயணமாக ராமேஸ்வரம் போக மீண்டும் கிடைத்த…