ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்..
ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன். பெரிய அளவிலான ஒன்றுகூடல் சாத்தியப்படவில்லை என்றாலும், சின்னச்சின்ன அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஒன்றுகூடல் நடந்தது.
இப்போது அது கொஞ்சம் பெரிய அளவில் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி உள்ளது.
சில நல்ல உள்ளங்களின் உதவியோடும் இந்த ஆண்டே இது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.
மேலும் விபரங்கள் விரைவில்..