Category: நகைச்சுவை

  • முனிவரும் தேளும்

    (குழந்தைகளுக்கான கதை) நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான். நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்தது. சில வினாடிகள் கழித்து, மீண்டும் முனிவர் நீரில் தத்தளித்த தேளை தூக்கிவிடப்பார்த்தார். ஆனால் தேளோ மீண்டும் அவர் கையில்…

  • ராமுவும் சோமுவும்

    ( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவனை கவனிக்காமல், மரத்தை நிமிர்ந்து…

  • பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

    படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம்…

  • நம்ம ஊர் பேய், வெள்ளைக்கார பேய் – ?!

    நம்மவர்கள் அனேகரிடமும் ஒரு பேய் கதைகள் இருக்கும். என்னிடமும் ஏராளமான கதைகள் உண்டு. ரத்தக்காட்டேரி, தலை இல்லா முண்டம் (முண்டம் என்றாலே தலை இல்லாததுன்ன தானே பொருள்?!), கொள்ளி வாய் பிசாசு தொடங்கி, கிணற்றில் விழுந்து உயிர் நீத்த காந்திமதி அக்கா, மரத்தில் தொங்கிய செந்தில் அண்ணன் என ஊருக்கு ஊர் விதவிதமான சம்பவங்களும், கதைகளும் இருக்கும். ஆனால் மற்றவர்களின் கதைகளில் வரும் படியான கொடுரமான பேய் எதையும் நான் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே அப்படி வளர்க்கப்பட்டது ஒரு…

  • ட்ரைலருக்கே ட்ரைலர் விடும் காலமிது..

    இன்று எல்லா துறைகள் பற்றியும் எழுதுபவர்கள் உண்டு. படைப்பிலக்கியம் தாண்டி தமிழில் எழுதப்படுவதற்கு என நிறைய துறைசார்ந்த இடங்கள் காலியாக முன்பு இருந்தன. இவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சரியோ தவறோ.. துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழில் அதிகமாகிவருவது கவனிக்கத்தக்கது. அதிலும் பொருளாதாரம் பற்றி தமிழில் எழுதுவதற்கு சரியான நபர்கள் இல்லாதிருந்தது. அதிலும் கூட இன்று பலர் வந்துவிட்டார்கள். எனக்கு தெரிந்து மிச்சமிருக்கும் துறைகளில் இசையும், மோட்டார்வாகனத்துறையும் மிக முக்கியமானதாக எனக்குப் படுகிறது. மோட்டார் வாகனத்தை பற்றி எழுதினால்…