Category: தகவல்கள்

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

    *எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும். *யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?* ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி…

  • டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

    பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி. இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க இயலாமல் திணறுவதுமாக இருப்பார்கள். மற்ற குறைபாடுகளைப்போல பார்வைக்கு நேரடியாக தெரியாத குறைபாடு இது என்பதால் இதனை உணர்ந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.…

  • ஃபீனிக்ஸ் சகோதரிகள்

      ‘‘என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்“ என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம்…

  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நிப்மெட்

    மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசால், சென்னை அருகில்  முட்டுக்காடில் நடத்தப்பட்டு வரும் தேசிய நிறுவனம்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். அது ’National Institute for Empowerment of Persons with Multiple Disabilities’ (NIEPMD). மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து…

  • ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை – ஒன்றுகூடல்

    ஏப்ரல் 2, 2014 அன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. அதை முன்னிட்டு ஏப்ரல் 5, சனி அன்று சென்னையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோரது ஒன்றுகூடல் ஒன்றை ஒருங்கிணைக்க இருக்கிறோம். இந்த ஒன்றுகூடலின் முடிவில் பெற்றோர்கள் இணைந்து இயங்க ஒர் கூட்டமைப்பை தொடங்க எண்ணியுள்ளோம். ஒத்த மனமுள்ள பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், பொதுவான தேவைகளை முன்னிட்டு போராடவும் உதவும் ஒரு அமைப்பாக அது விளங்கும். நாள்: ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை…