Category: விடுபட்டவை

  • விடுபட்டவை 17.07.09

    என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான் மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன்.…

  • விடுபட்டவை 03/ஜூன்/2009

    “பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன். ஆண்டு…

  • தேர்தல்- 2009 (அல்லது) விடுபட்டவை- 4.மே.09

    தேர்தல் சூடு பரபர வென இருக்கிறது. படித்த மேல் தட்டு மக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பா.ஜ.க அதன் பிரதம வேட்பாளர் அத்வானி பெயரில் தனி தளம் அமைத்திருக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தளத்தில் பல செய்திகளையும் பாஜக வின் தேர்தல் அறிக்கையையும் கிடைக்கும் படி வடிவமைத்திருக்கிறார்கள். அதே போல வலைப்பதிவையும் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவும் இருமொழிகளில் இருக்கிறது. அத்வானியே வலைபதிவது போல இருக்கிறது பதிவுகள். கருத்துசொல்லவும் முடிகிறது. இங்கே பல தமிழ் வலைப்பதிவுகளில் அந்த…

  • விடுபட்டவை 31.03.09

    கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம். இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை…

  • விடுபட்டவை 13 மார்ச் 2009

    இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி…