Category: பிள்ளைத்தமிழ்

  • பிள்ளைத்தமிழ் 4

    நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது போன்ற படிப்பு சார்ந்த வேலைகள் என, இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் கழிந்துவிடும். அதுபோக, மீதமுள்ள நேரத்தில் குழந்தைகளுடனான நம்…

  • பிள்ளைத்தமிழ் 3

    தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன். இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் + நீதி போதனை வேண்டாம். படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளைத்…

  • பிள்ளைத்தமிழ் -2

    எனது உறவினர் ஒருவர், குடும்ப வாட்ஸ் ஆப் குழுமத்தில் தனது மகன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வெளியிட்டிருந்தார். 97 சதவீதம் பெற்றிருந்தான் அவன். 3 சதவீதம் குறைந்ததற்கு அவனது இதர ஆர்வங்களே காரணம் என்று ஒரு பட்டியலைப் போட்டு அங்கலாய்த்திருந்தார். பலரும் பலவிதத்தில் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். இன்றைக்குப் பெற்றோர் எவ்வளவு மாறிப்போய் உள்ளனர் என்பதைக் கண்டு எனக்கு வியப்பு ஏற்பட்டது. நானெல்லாம் படிக்கும்போது, நல்ல மார்க் எடு என்றும், பாஸானால் போதும் என்றெல்லாம் சொல்வார்களே…

  • பிள்ளைத் தமிழ்..!

    எனது தோழி ஒருத்தியின் பெண், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தாள். அவளுக்கு ஒரே பெண். நாங்கள் அவள் இல்லத்துக்கோ, அல்லது அவள் எங்கள் வீட்டுக்கோ வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம், தன் பிள்ளையைப் பற்றி புலம்பியபடியே இருப்பாள் தோழி. ‘எப்படியாச்சும் ஒரு டிகிரிய படிக்கவெச்சிட்டா போதும். ஒரு கல்யாணத்தைக் கட்டிவெச்சிடலாம். படிப்பே வரமாட்டேங்குது’ என, விதவிதமான புகார்ப் பட்டியலை வாசித்தபடியே இருப்பாள். அவளது குழந்தை, ஆங்கிலவழிக் கல்வியான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டதில் படிப்பவள் என்பதால், ஊடரங்கு…