விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன.

அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை அவரிடமே வாங்கி, பார்த்தோம்.

அவர் குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது யூடியூப்-ல் அவரது ’ராம் கி நாம்’ என்ற விவரணைப்படம் கிடைத்தது. ஐந்து விருதுகளை வென்ற இது ரதயாத்திரை நடந்த போது தயாரிக்கப்பட்ட விவரனைப்படம்.

http://www.youtube.com/watch?v=Vp49AOLX488

மேற்கண்ட சுட்டிக்குப் போனால் தொடர்ந்து, அப்படத்தின் மற்ற பாகங்களையும் காணமுடியும்.

தொடர்புடைய சுட்டி:

இயக்குனரின் இணையப்பக்கம்: http://www.patwardhan.com