Tag: அரசியல்வாதிகள்

  • ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…”

    சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர். எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள்…

  • விடுபட்டவை – 04.08.09

    சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த…

  • இனி அகதிகள் கதி என்ன?

    தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. போர் ஓய்ந்து…

  • விடுபட்டவை 31.03.09

    கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம். இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை…

  • விடுபட்டவை 13 மார்ச் 2009

    இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை. என்னோடு ஜாலியாக(!) இல்லாமல்.. இனி…