Tag: குழந்தை

  • காவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை

    அறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார். 26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் இறங்கிவிட்டு விட்டுப் போவார்கள். அதே போல மாலையிலும் திரும்பி வந்து அழைத்துச்செல்வார்கள். இது அவர்களின் தினப்படி வழக்கம். கடந்த ஜனவரி…

  • காகங்கள் ஏன் கருப்பாச்சு?

    கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. தொடர்…

  • 30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்!

    “அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம். இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், பள்ளி என்பதும் மட்டுமே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, உங்கள் மனமகிழ்ச்சியே அவற்றை தீர்மானிப்பவை. ஆக உங்கள்…

  • தோல்வி நிலையென நினைத்தால்..

      சமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது?! நினைவு இருக்கிறதா? இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை வரும். இன்று நம் பிள்ளை எப்போது தோல்வியை எப்போது சந்தித்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். விடை கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அவர்களை அழைத்தே…

  • ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி. இதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள்…