Tag: சிறுகதை

  • சிங்கமும் நரியும்

    (குழந்தைகளுக்கான கதை) காட்டுராஜா சிங்கத்துக்கு தினம் ஒரு விலங்கு உணவாக வலியப்போய் நின்று, சாகவேண்டும் என்ற விதி அந்த காட்டில் இருந்தது. அப்படி ஒரு நாள் முயல் ஒன்றின் முறை. அது சிங்கத்தின் குகை நோக்கி போய்க்கொண்டிருந்த போது, எதிர்பட்ட சிங்கத்தின் காரியதரிசி நரிக்கு, கொழு கொழு முயலைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. நரியின் எண்ணத்தை புரிந்துகொண்ட முயல் நாலு கால் பாய்ச்சலில் முன்னால் ஓடிப்போய் நின்றுவிட்டு, ’ராஜாவிக்கு நான் உணவாகப் போகவில்லை எனில், வேறு எவரையாவது…

  • ராமுவும் சோமுவும் -2

    (குழந்தைகளுக்கான கதை) சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள். ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவன் தாத்தாவின் சோற்றுச்சட்டி கண்ணில் பட்டது. அதை எடுத்து சோமுவின் கையில் கொடுத்தான். சட்டியை கையில் வாங்கிய சோமு…

  • முனிவரும் தேளும்

    (குழந்தைகளுக்கான கதை) நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த தேள் ஒன்றை வெளியில் எடுத்துப் போட்ட முயன்றுகொண்டிருந்தார் முனிவர் ஒருவர். இந்த காட்சியை அந்தப் பக்கம் வந்த சோமு நின்று வேடிக்கை பார்த்தான். நீரில் கையை விட்டு, முனிவர் தேளை தூக்கியதும் அது கையில் கொட்டி விட்டது, ஆ என்று கையை அவர் உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்தது. சில வினாடிகள் கழித்து, மீண்டும் முனிவர் நீரில் தத்தளித்த தேளை தூக்கிவிடப்பார்த்தார். ஆனால் தேளோ மீண்டும் அவர் கையில்…

  • ஒரு முன்கதைச் சுருக்கம்

    பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ…

  • நகரம் (சிறுகதை)

    ’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை எழுப்பிவிட்டார். ‘இல்ல அண்ணாச்சி.. வேணாம். அப்பறம் நானே வந்து பார்க்கலாம்னு நெனைச்சேன். ஊர்ல இருந்து தோஸ்த்து ஒருத்தன் வந்திருக்கான். மலாடுல…