21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்)

தனியா பண்ணப்போறியா..?

ஆமாசார்

பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும்.

நான் மவுனமாக நின்றிருந்தேன்.

இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா?

இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன்.

அப்ப சானலுக்கே பண்ணு.. நம்மட்ட சண்டே மேட்னி-ன்னு ஒரு மணிநேரம் ஸ்லாட் இருக்கு.

சரியென ஒப்புக்கொண்டு முன்தயாரிப்பு ஸ்க்ப்ரிட் எழுதி முடித்தேன். அவரிடன் அதைக்காட்ட போன போது, பேசாம.. நீ திரைக்கு அப்பால் நிகழ்ச்சில ஹரிதாஸ் படத்துக்காக இதை செய்யேன் என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று மறுத்தேன். ஆனால் விடாப்பிடியாக வாதம் செய்து, தான் சொல்லுவதின் காரணத்தை உணர்ந்துகொள்ளவும், சண்டே மேட்னிக்கு ஒதுக்கிய ஸ்லாட் இப்போது இல்லையென்றும் விளக்கிச்சொன்னார்.

அப்போ தனியாவே செஞ்சுக்கிறேன் சார்- என்று சிறுபிள்ளையாக மல்லுகட்டினேன். ஆனால், பொறுமையாக அவரும், கார்மல் அண்ணனும் தாங்கள் அப்படிச்சொல்லுவதற்கான அவசியத்தைச்சொன்னதும், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டேன். ஒப்புக்கொண்டு எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக்க 200% உழைப்பை செலுத்துவது வழமை என்பதால் அலைந்து திரிந்து, நபர்களைதேடி அலைந்துப்பார்த்து பேசி, அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் பிக்ஸ் பண்ணி, சூட் முடித்து, எடிட்டிங் டேபிளில் உட்காரும் போதுதான் கைலாசம் சார் என்னை வற்புறுத்தியதின் காரணத்தை உணரமுடிந்தது.

கடந்த வாரம் புதுயுகம் சானலில் நிகழ்ச்சி ஒளிபரப்பான பின், எனக்கு தொலைபேசி வழியாக வரும் அழைப்புகளின் மூலம் இந்த நிகழ்ச்சியின் வீச்சை உணர முடிகிறது.

இப்படியான ஒரு நிகழ்ச்சியின் வழியாக ஆட்டிசம் குறித்த, விழிப்புணர்வுக்கும், புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் வழிவகுத்த, புதுயுகம் சானல் தொடங்கி உடன் உழைத்த அத்துனை இதயங்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை பகிர்துகொள்கிறேன்.

நிகழ்ச்சியின் யூட்டியூப் சுட்டிகள் கீழே:-

பாகம் 1 :- http://www.youtube.com/watch?v=KZqklu4nEEA

பாகம் 2 :- http://www.youtube.com/watch?v=m3I6SJ4g6og

பாகம் 3 :- http://www.youtube.com/watch?v=WJ98XLedOZA

பாகம் 4 :- http://www.youtube.com/watch?v=tfwZHjNP1KU

பாகம் 5 :- http://www.youtube.com/watch?v=sfIW-cY8fFA

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, சினிமாப் பார்வை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, திரைப் பார்வை, மதியிறுக்கம், மனிதர்கள், மீடியா உலகம், விளம்பரம், வீடியோ and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

  1. Ram says:

    Thank you for this wonderful program.
    Especially Mr.Praveen gives hope and confidence to parents of spl.need kids.
    Thank you once again!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.