Tag: விளம்பரம்

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

      சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி…

  • ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015

    *எதற்காக இந்த ஒன்றுகூடல்?* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும். *யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?* ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி…

  • டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

    பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி. இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க இயலாமல் திணறுவதுமாக இருப்பார்கள். மற்ற குறைபாடுகளைப்போல பார்வைக்கு நேரடியாக தெரியாத குறைபாடு இது என்பதால் இதனை உணர்ந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.…

  • ஆட்டிசம் : அடுத்து என்ன?

    இன்று உலக அளவில் குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் குறைபாடுகளில் ஆட்டிசமும் ஒன்று. ஆட்டிசம் என்பது ஒரு நிலை என்று இப்போது சொல்கிறார்கள். அதாவது, இந்த நிலைக்குள் இருப்பவர்கள் வெளியேயும் வரலாம், வராமலும் போகலாம். ஆனால், ஆட்டிசம் ஏன் வருகிறது? எப்படி இதை வராமல் தடுப்பது அல்லது கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியுமா என்று அப்பாவியாக நாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறோம். மருத்துவ உலகில் ஒரு பகுதியினர் இதுமாதிரியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…