Category: சிறுகதை

  • தானே தெளியும்!

      எப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிறகு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் தனக்கு மோசமடைந்து வருவதாகவும் பெரிய புகார் பட்டியலை வாசித்தார் ராமு. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மகனை அழைத்துக்கொண்டு அடுத்த வாரம்…

  • சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

    எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் காலை10மணிக்கு சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம். துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு. அப்புறம் நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி. சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி. இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள். நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்.. – விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

    சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து…

  • துரைப்பாண்டி – மா.சிவக்குமார்

    துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி) ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி. ‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது. ‘தொறப்பாண்டி’ கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு ‘பதினொரு…