Tag: அரசியல்

  • விடுபட்டவை 25-11-11

    பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம். மொத்தம் !!! குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி: தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை) ———— கொஞ்ச நாட்களாகவே…

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…

  • விடுபட்டவை 7-11-11

    உண்மையிலேயே விடுபட்டவை எழுதி ரொம்ப நாளாச்சு. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமாச்சாரங்கள் எளிதில் எனக்கு பிடிபடாததால்.. கூகிள்காரன் விட்ட பஸ்ஸுலயே அதிகம் நேரத்தை ஓட்டியாச்சு. பதிவு பக்கம் வர முடியல. இனியாச்சும் இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கனும். (எட்டிப்பார்த்தா மட்டும்.. படிக்க ஆளு வேணும்ல.. ஹிஹி) — செர்னோபிள் தொடங்கி ஃபுகுசிமா வரைக்கும் அணு உலைகளினால் ஏற்பட்ட ஆபத்தை பார்த்த பிறகும் இங்கே கூடங்குளத்தில் அணு உலை தொடங்கியே தீருவேன்னு மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறதும், அதற்கு…

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • The Story of Bottled Water

    இன்று அனேக மக்கள் பாட்டில் குடிநீர் தான் சுத்தமானது என்றும் சுகாதாரமானது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் பெருமுதலாளிகளின் பயங்கரமுகம் பற்றி இவ்விவரணைப்படம் பேசுகிறது. நம் சென்னையின் புறநகர் பகுதில் இருக்கும்(பள்ளிக்கரணை ஏரி அருகில்) கும்பை மேடு குறித்தும் இதில் வருகிறது. இப்படத்தை தயாரித்தவர்கள், இது போன்று சந்தைப்படுத்தப்படும் பலவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்க ஒர் இயக்கத்தையே நடத்துகின்றனர் அவர்களின் வலைத்தள முகவரி: http://www.storyofstuff.org/ —