Tag: குழந்தைகள்

  • பிள்ளைத்தமிழ் -2

    எனது உறவினர் ஒருவர், குடும்ப வாட்ஸ் ஆப் குழுமத்தில் தனது மகன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வெளியிட்டிருந்தார். 97 சதவீதம் பெற்றிருந்தான் அவன். 3 சதவீதம் குறைந்ததற்கு அவனது இதர ஆர்வங்களே காரணம் என்று ஒரு பட்டியலைப் போட்டு அங்கலாய்த்திருந்தார். பலரும் பலவிதத்தில் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். இன்றைக்குப் பெற்றோர் எவ்வளவு மாறிப்போய் உள்ளனர் என்பதைக் கண்டு எனக்கு வியப்பு ஏற்பட்டது. நானெல்லாம் படிக்கும்போது, நல்ல மார்க் எடு என்றும், பாஸானால் போதும் என்றெல்லாம் சொல்வார்களே…

  • தொட்டுத்தொட்டு ஓடிவா!

    இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதற்கும் நேரமில்லை நம்மிடம். நட்பு, அன்பு, உறவுகள் என எல்லாவற்றின் இடங்களையும் மின்னனுப்பொருட்கள் பிடித்துக்கொண்டுவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்வரை உறவினரின் வீட்டுக்குப்போகிறோம் என்றால், தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும். விளம்பர இடைவேளையின் போதுதான் நம்மிடம் பேசுவதற்கு திரும்வார். இன்று பலரின் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோடு, பேசத்துவங்கிய சில நிமிடங்களிலேயே, வைபை பாஸ்வேர்ட் தான் கேட்கிறார்கள். இப்படி மின்னனுப்பொருட்களால் சூழப்பட்டுள்ள நம் வாழ்வில் பாதிப்புக்களை உணர்வது குழந்தைகள்…

  • உள்ளம் கவர் கோமாளி – வேலு சரவணன்

      “………………………….” பள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். தூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த ’ஹோய்’ ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன்…

  • வாசிப்பனுபவம் – வாத்து ராஜா

    வாத்து ராஜா மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு அவள் பாட்டி சொல்லும் கதையாக விரிகிறது. கதைக்குள் கதை. ஒரு இடத்தில் பாட்டி கதையை முடிக்காமல்.. வேறு ஊருக்கு சென்று…

  • வாங்க பழகலாம்..

    சின்ன வயசில் நான் மிகவும் வியப்பாக பார்த்த மனிதர் என்றால் அது நாகராசன் என்ற அண்ணன் தான். அவர் ஒரு சவ்வு மிட்டாய் வியாபாரி. தோளில் பெரிய மூங்கிலை சாய்த்து வைத்திருப்பார். அந்த கழியின் மேல பாவாடைச் சட்டை அணிந்து, கையில் சலங்கை மாட்டி இருக்கும் பெண் பொம்மை பார்க்க அழகாக இருக்கும். கண் எழுதி, உதட்டுக்கு சாயமிட்டு, தலைவாரி, காதுகளில் கம்மல் மாட்டிக்கொண்டு இருக்கும் பொம்மை அது. மூங்கிலில் உள்ளே இருந்து வரும் கயிறு ஒன்றில்…