Tag: சிறுவர்

  • புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

    யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்? என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம்…

  • சாகசங்களை அள்ளித்தந்த ஒரு பயணம்

      பயணங்கள் எப்போதுமே சுகமானவை. அதிலும் அனேக சிறுவர்களுக்கு பயணங்களின் மீது பெரும் காதலிருக்கும். பயணப்படும் ஊர் பற்றியோ, அங்கே காணப்போகும் அரிதான விஷயங்கள் பற்றியோ எவ்வித அக்கரையுமின்றி இருப்பதைக் காணமுடியும். அவர்களுக்குப் பயணங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைக்கொடுக்கும். ஒரு குடும்பம் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறது. எதிர்பாராத விதமாகப் புயல் தோன்றக் கப்பல் உடைந்து நீர் உள்ளே வரத்தொடங்குகிறது. குடும்பத்தின் தலைவனும், தலைவியும் அவர்களது பிள்ளைகளுடன் சிறுபடகில் தப்பிக்க நினைக்கிறார்கள். அப்போது கப்பலில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளையும் காப்பாற்றவேண்டுமென்று…

  • வாசிப்பனுபவம்- உச்சி முகர்

    விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது. வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து…

  • ராமுவும் சோமுவும்

    ( பேயோன் , அருண்நரசிம்மன் ஆகியோரின் தூண்டலில் குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவனை கவனிக்காமல், மரத்தை நிமிர்ந்து…

  • துரைப்பாண்டி

    இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி! என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே! ———————————— அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன்.…