Tag: ஞாநி

  • விடுபட்டவை 25-11-11

    பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம். மொத்தம் !!! குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி: தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை) ———— கொஞ்ச நாட்களாகவே…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

    நாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது கூட்டம் இது.  இதற்கு முன்  ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம். நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே பாய் விரித்து வைத்திருந்தார்கள். சரியாக மணி 3.50க்கு எல்லாம் சிதறிக்கிடந்தவர்கள் எல்லாம் வீட்டினுள் வந்து அமர்ந்துகொண்டார்கள். கூட்டம் அதிகமாக அதிகமாக..…

  • கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்

    ’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..? “?…!…?” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?” “தெரியலையே சார்” ”தெரியலையா? நீங்கல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்டோ?” — இது மாதிரியான கேள்விகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்களிடம் சந்தித்துள்ளேன்.…

  • விடுபட்டவை 05.10.08

    சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில்…