Tag: புனைவு

  • மந்திரச் சந்திப்பு- 9

    முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது. “வாண்டுமாமா” என்றான் ஜான்சன். “என்னது வாண்டுமாமாவா?” ”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய…

  • மந்திரச் சந்திப்பு- 5

    திடீரென குறுக்கிட்ட குரலைக் கேட்டு குழம்பிப்போன சுந்தரன், குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டும்படி, தனக்கு மந்திரங்கள் கற்பித்த குருவை வேண்டினான். அவரோ, ஒரு பழைய காகிதத்தைக் காட்டினார். காகிதம் எங்காவது பேசுமா என்ன? அதுவும் செய்தித்தாள் போல இருந்தது. சுந்தரன், இம்முறை கண்ணை மூடி, அந்த செய்தித்தாள் எங்கே இருகிறது எனக்கண்டறிய முயன்றான். சூர்யா தொடங்கி, கடைசியாக உரையாடலில் இணைந்துகொண்ட குமார் வரை எல்லோரைச் சுற்றிலும் நோட்டமிடுவதுதான் அவனது திட்டமாக இருந்தது. அப்படி அவன் சூர்யாவிற்கு பின்…

  • மந்திரச் சந்திப்பு- 3

    ஷாலுவின் கண் முன் மரப்பாச்சித் தோன்றியது. வேறு ஆடைகள் அதற்கு அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடை மாறினாலும் அதனை அடையாளம் காண்பது ஷாலுவிற்கு என்ன கடினமா என்ன? மரப்பாச்சியைப் பார்த்த்துமே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, “ஏய்! ஷாலு ஏன் இப்ப அழுரே!” “சாரி இளவரசி, நான், உன்னைய தொலைச்சிட்டேன். இப்ப நீ எங்க இருக்க? எப்படி இருக்க?” “ஹா..ஹா.. இதுக்கா அழுகிறாய். நீ என்னை தொலைக்கவில்லை ஷாலு. நானாகத்தான் உன் கையில் இருந்து நழுவிக்கொண்டு போனேன். இப்போ இங்கே…

  • மந்திரச் சந்திப்பு- 2

    யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.) ”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன். “ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?” “ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி…

  • வாசிப்பனுபவம் – கரும்புனல்

    உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கடந்த வந்த பாதையில் குறைந்த பட்சம் ஒரு நாவலுக்கான விசயமிருக்கும். அதை நாம்மில் பலரும் கவனிக்காது தவறவிட்டு விடுகிறோம். கவனமாக நினைவுகூர்ந்தால், சம்பவங்களைக் கோர்த்து, அழகான கதைச்சரடை உருவாக்கிட முடியும் என்று அனேக நண்பர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன்/ சொல்லியும் வருகிறேன்.  அப்படி, தான் கடந்து வந்த அனுபவத்தை அழகாக தொகுத்து, கரும்புனல் நாவலாக கொடுத்துள்ளார் ராம்சுரேஷ். சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும்…