Category: அப்பா

  • பாலா ஹாப்பி அண்ணாச்சி..

    ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி…

  • ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்

    எங்கள் பையனின் வளர்ச்சி எல்லாம் சரியாகத்தான் இருந்ததாக நாங்கள் நம்பிகொண்டிருந்தோம். ஒன்னரை வயதில் மருத்துவரும், ஓர் ஆட்டிசக்குழந்தையின் தகப்பனாகிய நண்பர் ஒருவரும் தான் கனி கண்ணோடு கண் பார்க்கவில்லை அதனால் ஆட்டிசக் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகத்தைச் சொன்னார்கள். தொடக்கத்தில் நாங்கள் நம்பவில்லை. அதற்கு காரணமுமிருந்தது. பொதுவாக ஆட்டிசக் குழந்தைகள் யாரையுமே கண்ணோடு கண் காண்பதில்லை. ஆனால் கனியோ எங்களிருவரையும் கண் பார்த்துச்சிரிப்பான். அதே சமயம் வீட்டுக்கு வந்துபோகும் நண்பர்களையோ உறவினர்களையோ அவன் நேரடியாகப் பார்ப்பதில்லை. இது…

  • உனக்கேன் இவ்வளவு அக்கறை..

    ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான். //..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.. //பராசக்தி படத்திற்காக கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனம். மேற்கண்ட வசனம் அப்படியே எங்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து…

  • சினேகிதனின் அப்பா

    அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…