Category: குழந்தை வளர்ப்பு

  • சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

    என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தை புத்தக வாசிப்பு பக்கம் திருப்பினேன். உடன்பிறந்தோருக்கும் வாசிப்பு பழக்கம் இருந்ததால், அவர்கள் படிக்கும் சிறுவர் பத்திரிக்கைகளை நானும் படிக்கத்தொடங்கியவன்…

  • முதல்வரின் வாழ்த்தும் எனது கோரிக்கையும்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியதை, ஒரு மனுவாக எழுதி எடுத்துச்சென்று, முதல்வரின் கைகளில் நேரடியாகச் சேர்த்தேன். உறைக்குள் வைத்து கொடுத்த மனுவை உடனடியாக…

  • வணக்கம் தமிழா- நேர்காணல்

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. யூடியூப் சுட்டி இங்கே

  • பிள்ளைத் தமிழ் 10

    ‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் (சோறு) கிடைக்காது’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. எவனொருவன் பொய் பேசுகிறானோ, அவன் உணவுகூடக் கிடைக்காமல் பசியால் துன்புறுவான் என்பதே இதன் பொருள். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் 292) என்பது வள்ளுவனின் வாக்கு! ஆகா, பொய் பேசுதல் என்பது இங்கே காலங்காலமாக இருந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். அதனால்தானோ என்னவோ, ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களும், நம்மை ஆள்பவர்களும் பொய்யர்களாக இருந்தும், நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிடப்…

  • பிள்ளைத்தமிழ் 9

    (உடல் பருமன் பாதிப்புகள்) அதிகாலைப்பொழுதில் நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம் என்று ஒரு சிலர் சுறுசுறுப்பாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்னும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் வந்து சேரவில்லை. விளைவு, உடலில் தேவையற்ற கொழுப்பு கூடுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்குள்ளாகவே இதயநோய்ப் பிரச்னையில் சிக்கிக்கொண்ட பலரையும் பார்க்க முடிகிறது. 33 வயதிலே ‘ஸ்டெண்ட்’ வைத்தவர்களைக்கூட நான் அறிவேன். அதைவிடக் கொடுமை என்னவெனில், இன்றைய குழந்தைகளில் பலர், அதிக உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். நானெல்லாம் பள்ளியில்…