Tag: சினிமா

  • என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு  மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் கொஞ்சம்…

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

    ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு…

  • ட்ரைலருக்கே ட்ரைலர் விடும் காலமிது..

    இன்று எல்லா துறைகள் பற்றியும் எழுதுபவர்கள் உண்டு. படைப்பிலக்கியம் தாண்டி தமிழில் எழுதப்படுவதற்கு என நிறைய துறைசார்ந்த இடங்கள் காலியாக முன்பு இருந்தன. இவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சரியோ தவறோ.. துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழில் அதிகமாகிவருவது கவனிக்கத்தக்கது. அதிலும் பொருளாதாரம் பற்றி தமிழில் எழுதுவதற்கு சரியான நபர்கள் இல்லாதிருந்தது. அதிலும் கூட இன்று பலர் வந்துவிட்டார்கள். எனக்கு தெரிந்து மிச்சமிருக்கும் துறைகளில் இசையும், மோட்டார்வாகனத்துறையும் மிக முக்கியமானதாக எனக்குப் படுகிறது. மோட்டார் வாகனத்தை பற்றி எழுதினால்…

  • விடுபட்டவை 03-03-2010

    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும்,…