த்துதெறி!மானம் கெட்ட அரசியல்வாதிகள்!!

ஈழத்தில் தொடரும் தமிழர்களின் சாவு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியோ.. பதவி மோகத்தால் வாயைத் திறக்க மறுக்கிறார். அவரின் இச்செயல்கண்டு கொதித்துப் போன.. டாக்டர் ராமதாஸ் தலைமையில் தா.பாண்டியன், திருமா, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அத்துனை தமிழினத்தலைவர்களும் இன்று கூடி சுமார் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். எங்களின் முடிவு..  மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்து விடும் அதனால் உடனே இந்தியா போரை நிறுத்தச்சொல்லும்.. என்றெல்லாம் பில்டப்கள் வேறு.

கடைசியில் இப்போது முடிவு செய்து அறிவித்து விட்டார்கள்.

ஜனவரி 30ம் தேதி சென்னை மெரினா காந்திசிலை அருகில் கருப்பு கொடி கட்டி, மவுனவிரதம் இருக்கப் போகிறார்கள்.

அட! மானங்கெட்ட நாய்களா.. இது தானா.. உங்கள்.. தமிழின.. உணர்வு.

த்துத்தெறி.. இவனுங்களை எதைக்கொண்டு அடிக்கலாம்..

கடைசி பிற்குறிப்பு-(29/01/09 காலை 5.30 மணி)- டாக்டர்.ராமதாஸின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது தெரியவர.. பா.ம.க சார்பில் மத்தியில் இருக்கும் அமைச்சர்களை பதவி விலகச்சொல்லுவார் என்கிறது பட்சி! பார்க்கலாம்!

This entry was posted in சமூகம்/ சலிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

14 Responses to த்துதெறி!மானம் கெட்ட அரசியல்வாதிகள்!!

  1. அய்யா ராமதாசு கலைஞர் பின்னாடி ஒளிச்சுக்குட்டு பூச்சாண்டி காட்ட பாக்கறார். கலைஞர் கண்டுக்கவே இல்லை.

    நாளைக்கே கலைஞர் ஆட்சி இதனால் கவிழ்ந்துன்னா ராமதாசு அதிமுக கூட்டணியில் சேரமாட்டார்கறதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லைன்னு கருணாநிதிக்கு தெரியும்.

    எல்லாம் எம பயலுங்கதான்.

    ஆனால் மத்திய அரசு ஆட்சிக்காலமும் முடியபொகுது..யாரை எப்படி மிரட்ட முடியும்? ச்சும்மா டகுல்பாச்சா காண்பிக்காமல் மக்கள் தெருவில் இறங்கி போராடினாதான் வேலையாகும்.

    யாரு ரெடி?

    .

  2. அரவிந்தன் says:

    பா.ம.க.இந்த ஈழதமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாத தி,மு.க வுக்கு ஆதரவு விலக்கு என்று ஒரு “செக்’வைக்கக்கூடாதா

  3. அனானி says:

    ஏனுங்கோ நீங்க ஏதாச்சும் செய்ய கூடாதா?
    சும்மா ப்ளாக்குல இப்படி எழுதாத்தான் செய்வீங்களா?

    த்துத்தெறி.. இவனுங்களை எதைக்கொண்டு அடிக்கலாம்..
    இப்படி அனாகரீகம் இல்லாமல் எழுதும் உங்களையும் ….??

  4. ஓட்டுப் பொறுக்கி நாய்கள். பா.ம.க மத்திய அரசிலிருந்து கூட விலக வேண்டாம் , அன்புமணியோ வேலுவோ ராஜினாமா செய்தாலே போதுமே…மத்திய அரசுக்கும் , கலைஞருக்கும் ‘செக்’ வைக்க முடியுமே…

  5. திரு says:

    இவ்வளவு தானா? அட, நானும் ஏதோ மத்திய அரசிலிருந்து விலகி, மக்களை சேர்த்து ரயில், பேருந்து நிறுத்தி, வேலைநிறுத்தம் செய்து இந்தியா இலங்கைக்கு செய்யுற அனைத்து உதவிகளையும் நிறுத்திடுவாங்கன்னு நினைத்தேன்.

    அட ச்சீ இதுக்கு வீட்டுக்குள்ளேயே மௌனமா காந்தி படத்தை கட்டி புடிச்சு உண்ணாம, சத்திய சோதனை படிச்சிட்டிருக்கலாம். தமிழர்களுக்கு/தமிழகத்திற்கு உண்மையான அரசியல் இயக்கமும், கூட்டுத்தலைமைக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இனியென்ன தமிழகத்தின் தலையில் புதுடில்லி நடனமாடும்.

  6. நாமக்கல் சிபி says:

    🙁

  7. நாமக்கல் சிபி says:

    //புதுடில்லி நடனமாடும்//

    புது டில்லி என்ன? ராஜபக்சேவே ஆடினாலும் சொல்றதுக்கில்லே!

    ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தீர்மானத்தின் படி ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார்!

    அங்கே அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ராஜபக்சே அவர்களை ச் சந்தித்து அப்பாவித் தமிழ்மக்கள் மீதான போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக பாவலா காட்டுவார் என்றும் அறியப் படுகிறது! பின்னர் இலங்கை ராணுவத் தளவதியுடன் சேர்ந்து இப்போரில் காயமடைந்த இராணுவ வீரகளைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வருவார்!

    அப்பாவி ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை முயற்சியில் உயிரிழந்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் இந்திய நாடாளு மன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்டது!

    (இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும் வரலாம், ஒண்ணும் சொல்றதுக்கில்லே!)

    http://pithatralgal.blogspot.com/2009/01/blog-post_28.html

  8. அக்னி பார்வை says:

    எனக்கு தெரிந்து மத்திய அரசு தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் ராஜினாமவிற்க்கெல்லாம் பயபடுவார்கள் என்று சொல்ல முடியாது. கூட்டணி அமைக்க மாட்டோம் என் சொன்னால் கொஞசம் பயபடலாம்..ஆனல் அப்படி சொன்னால் பாமாவிற்க்கோ, திருமாவிற்கோ அரசியல் எதிர்காலம் பற்றிய பயம் வரும்..

    இவர்கள் ஏழ தமிழர்களை காப்பற்றவில்லையென்றாலும் பரவயில்லை போலி அரசியல் நாடகம் நடத்தும் போது தான் மனம் வாடுகிறது.

    இது போததென்று, இந்தியாவை பிரிப்போம் , அழிப்போம் என்று வாய் சவடால் விட்டு எரிகிற நெருப்பில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி விடுகிறார்கள்..

  9. jegadeesan says:

    🙁

  10. கொஞ்ச நஞ்ச அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களையும் இந்த ஈனர்களின் செயல் நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்

  11. mohideen says:

    இந்த இலங்கைத் தமிழனை சொல்லணும் இன்னமும் உங்களை தங்களின் உறவு என்று சொல்லுற முட்டாள் தனத்தை என்ன சொல்ல.இவங்களுக்கு வேற ஒரு நல்ல கொவுரவமான இனமே கிடைகலையா ??

  12. ஜுர்கன் க்ருகர்.. says:

    தமிழின பாதுகாப்பிற்காக இனியும் தமிழக அரசியல்வாதிகளையே நம்பி இருப்பது நம் அறிவீனத்தை காட்டுகிறது.

  13. தயாநிதி says:

    //அட! மானங்கெட்ட நாய்களா.. இது தானா.. உங்கள்.. தமிழின.. உணர்வு.///

    கருணாநிதியை இப்படியெல்லாம் கூறலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.