Tag: கட்டுரை

  • சிறார் இலக்கியம்: எதிர்காலம்

      சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும்…

  • உழைப்புக்கு மரியாதை!

    உழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள்! படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல! என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படியுங்கள்.. உழைப்பு உயர்வு தரும்! உண்மை. இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், எந்த உழைப்பு உயர்வு தரும்…

  • சுத்தம் சொல்லிக் கொடுங்க!

    சுத்தம் சோறு போடும்! “ அப்ப குழம்பு எது ஊத்தும்?”னு வேடிக்கையா கேட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம்! பதினைந்து வயது வரையிலான சிறார்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் சுகாதாரமின்மையே என்று உலக சுகாதார நிறுவனம் ஒர் அறிக்கையில் சொல்கிறது. இன்று பள்ளி செல்லும்…

  • ஐந்திலேயே வளையட்டும்!

    கட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் உங்களின் சிறுவயதில் எப்படி இருந்தீர்களாம்?) இப்போது இன்றைய பிள்ளைகளை, கொஞ்சம் கவனியுங்கள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல்…

  • அட்வைஸ் பண்ணி அறுக்காதீங்க..!

    இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள். உலகில் எல்லோரும் அடுத்தவருக்கு இலவசமாக அள்ளித்தருவது அட்வைஸ்தான். ஆனால், நாமும் அந்த அறிவுரைகளின்படியே நடந்திருக்கிறோமா என்பதை எவரும்…