Tag Archives: வாசிப்பு

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , | 1 Comment

புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

பிள்ளைகள் செய்துபார்க்க எளிய விஞ்ஞான சோதனைகள்!

    எனது பள்ளிப்பருவத்தில் பாடங்கள் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமிருந்தது. அதற்காக வாங்கிய அடிகளும் அதிகம்தான். எந்த விளையாட்டுப்பொருளை எடுத்தாலும் அதனைப் பிரித்து, ஆராய்ந்து மீண்டும் அதேபோல மாட்டிவிடுவேன். மீண்டும் சரியாக பொருத்தமுடியாதபோது, உதைபடுவேன். செய்துபார் என்று எந்த நூலில் படித்தால் அதனை அப்படியே செய்துபார்க்கும் பழக்கமும் இருந்தது எனக்கு! ஒருமுறை எங்கள் … Continue reading

Posted in வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , | Leave a comment

புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்!

இன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்? வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை … Continue reading

Posted in கட்டுரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து | Tagged , , | 1 Comment

சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். … Continue reading

Posted in நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து | Tagged , , , , , , , , | 5 Comments